அரசு வெளிப்படையாக இருக்க வேண்டும்: ஹர்ஷ டி சில்வா கோரிக்கை


யுவானைப் பயன்படுத்தி சீனாவிடமிருந்து பெற்ற சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும் என்று அரசு உறுதியளித்திருந்தாலும் இந்தக் கடன்களின் விலைப்பட்டியல் டொலர்களில் எழுதப்பட்டுள்ளதால் டொலரிலேயே அரசு செலுத்த வேண்டியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் டொலரின் பெறுமதி உயர்வடைந்து வருவதால் அரசால் அத்தகைய கடன்களைச் செலுத்தக்கூடிய வாய்ப்பு அரிதாகவே உள்ளது.

இந்நிலையில் யுவானில் கடன்களை செலுத்த முடியும் என்று அரசு கூறி, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க முயற்சிக்கிறது. இவை நடைமுறை தீர்வுகள் அல்ல. எனவே அரசை வெளிப்படையாக இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK