ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக றிஸ்கான் முகம்மட் நியமனம்


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக கே.ஆர்.றிஸ்கான் முகம்மட், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் திங்கட்கிழமை (08) கட்சி தலைமையகத்தில் வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய இளைஞர் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்நியமனத்தின் மூலம் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு பல்வேறு நலன் சார்ந்த திட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரிடம் றிஸ்கான் முகம்மட் கலந்துரையாடினார்.

அத்துடன், இவர் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக கடமையாற்றிய காலத்தில் இளைஞர்களுக்கு பல்வேறு நலன்சார் திட்டங்களை முன்னெடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK