தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம்(7)  நேகம அல்ஹிக்மா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்   நேகம அல்ஹிக்மா பாலர் பாடசாலையில்  "பலம் மிக்கதோர் பெண் - நிலையான எதிர்காலம்" என்ற தொனிப்பொருளில் மகளிர் தின சிறப்பு விழா ஒன்று கொண்டாடப் பட்டதோடு  அதனை தொடர்ந்து பாலர் பாடசாலை, பெரிய பள்ளிவாயல், பாடசாலை போன்ற இடங்களில்  சங்கத்தின்  உறுப்பினர்களால்  மரக்கன்றுகளும் நடப்பட்டன.  இந்த நிகழ்ச்சியானது மகளிர் தின நிகழ்ச்சியாக மட்டும் நின்று விடாது மாணவர்கள், ஊர்வாசிகள் அனைவரும் பயன்பெறக்கூடிய  ஒரு சமூக செயற்பாடாக அமைய வேண்டுமென்பதனாலேயே  இம்முயற்சி நடைமுறைப்படுத்தப் பட்டது