குருதி வழங்க ஒன்று திரண்ட இளைஞர்கள்; தற்காலிகமாக இரத்தம் சேகரிக்கும் பணி நிறுத்தம்!

தலைமன்னார் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (16) மதியம் இடம் பெற்ற புகையிரத விபத்து காரணமாக காயம் அடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்திய சிகிச்சை பெற்று வருகின்றவர்களுக்கு தேவையான குருதி தட்டுப்பாடு வைத்தியசாலையில் நிலவி வந்தது.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் குருதி வழங்க மக்களிடம் கோரிக்கை விடுத்தது.

அதற்கு அமைவாக  மன்னாரின் பல பகுதிகளில் இருந்து இளைஞர் யுவதிகள் உற்பட நூற்றுக்கணக்கானவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு  வருகை தந்து குருதி வழங்கியுள்ளனர்.

குறித்த விபத்தில் 25ற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் இரத்தம் வழங்குவதற்கு தன்னார்வத்துடம் வருகை தந்து குருதி வழங்கியுள்ளனர்.

எனினும்  வைத்தியசாலையின் இன்றைய அவசர கால நிலை காரணமாக குறிப்பிட்ட அளவு குருதியே பெற்றுக்கொள்ளப்பட்டு இரத்தம் சேகரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்னும் இரத்த தேவை காணப்படுவதனால் நாளைய தினமும் மன்னார் பொது வைத்திய சாலையின் இரத்த வங்கியில் குருதி வழங்க முடியும் என தெரிவிக்கப்படுள்ளது. (Benitlas Beny)










BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK