அசாத் சாலி கைது செய்யப்படும் போது அவர் பயணித்த மோட்டார் வாகனத்தில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் குறித்த வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இவை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்

கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

முன்னாள் ஆளுநர் அசாத்சாலி நேற்றைய தினம் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.