கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொலைச் சம்பவம் - பல உண்மைகளை அம்பலப்படுத்திய மனைவி


கொழும்பு, டாம் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பிலான சந்தேக நபர் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரி தொடர்பில் அவரது மனைவி பல தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.

“ஒரு நாள் தனது பணியிடத்தில் வேலை செய்யும் பெண்கள் வீட்டுக்கு வர விரும்புவதாக கணவர் கேட்டார். அதற்கமைய இரண்டு பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

வீட்டிற்கு வந்த கணவர், அந்த பெண்களுடன் எனது மகளையும் அழைத்துக் கொண்டு பரவியல் ஏரியில் குளிக்க சென்றார். எனினும் இவர்கள் மொனராகலை பெண்கள் என அவர் கூறியிருந்தார்.

எனினும் அவர்கள் எம்பிலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அவர்களுடன் சென்ற எனது மகள் கூறினார். ஒருவரின் பெயர் திலினி எனவும் மகள் கூறியிருந்தார்.

அதன் பின்னர் திலினி எனது கணவரை வீட்டில் அருகில் வைத்து கடுமையாக திட்டியுள்ளார். என்னை நீ ஏமாற்றிவிட்டாய் எனக்கு தெரியும் என திலினி கூறியுள்ளார். திலினி என்ற பெண் அவ்வளவு நல்லவர் இல்லை என எனது நண்பி கூறியிருந்தார்.

அத்துடன் கணவனின் கையடக்க தொலைபேசியை சோதனையிட்ட போது எம்பிலிபிட்டி பிரதேச பெண்ணின் குறுந் தகவல்களும் அந்த பெண்ணின் புகைப்படங்களும் காணப்பட்டன. அதனை பார்த்தவுடன் உங்களுக்கு பெரிய மகள் ஒருவர் உள்ளார் தயவுசெய்து இந்த தொடர்பை நிறுத்திக் கொள்ளுமாறு கணவனிடம் கூறினேன்.

3ஆம் திகதி இரவு 11 மணியளவில் கணவர் வீட்டிற்கு வந்தார். கையில் கறுப்பு நிறப் பை ஒன்றும் இருந்தது. எனினும் அவர் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் மகளுக்கு தொலைபேசியில் அழைப்பேற்படுத்திய கணவர், தான் கொழும்பில் இருப்பதாகவும் 4 நாட்களின் பின்னர் வீட்டிற்கு வருவதாகவும் கூறினார். எனினும் 3ஆம் திகதி இரவு வீட்டிற்கு வந்தார். உணவு கொடுத்தேன். எனினும் என்னிடம் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.

உணவு சாப்பிட்ட பின்னர் மூத்த மகனின் அறைக்கு சென்று அவர் உறங்கியுள்ளார். அடுத்த நாள் காலை நான் மகளின் தேவை ஒன்றிற்காக புத்தள பிரதேசத்திற்கு சென்று வீடு திரும்பும் போது கணவர் வீட்டில் இருக்கவில்லை.

அன்றைய தினம் இரவு கணவர் மீண்டும் வீட்டிற்கு வந்தார். எங்களுக்கு ஐஸ்கிறீம் வகை ஒன்றும் கொண்டு வந்தார். பின்னர் பொலிஸ் அதிகாரிகள் இருவர் வீட்டிற்கு வந்தனர். பொலிஸார் வந்தவுடன் கணவர் திடீரென வீட்டை விட்டு சென்று விட்டார்.

அவர் மிகவும் தவறானவர். அவரை சரிப்படுத்துவதற்கு முயற்சித்தேன். எனினும் அவர் கேட்கவில்லை” என தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK