பசறை லுணுகல கோர விபத்து தொடர்பாக வைத்தியர் ஒருவரின் மனவுருக்கம்


விடி காலை பொழுது தொலை பேசியில் வைத்தியர் சமர பந்து. மச்சான் பஸ் ஒன்று பிரண்டு ரொம்ப டேமேஜ் வேகமா வாடா எனது அழைப்பு வைத்திய சாலையின் பணிப்பாளருக்குபசரையில் பஸ் விபத்து ஒன்று வேகமாக செல்ல வேண்டும் நான் வேகமாக அவசர சிகி்ச்சை பிரிவுக்கு சென்றேன் செனென் உபகரணங்கள் அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர்..

சிந்தக, செனென் என்னோடு.. சச்சித் அனைத்து தகவல்களையும் வழங்கி கொண்டு இருந்தார் வைத்தியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களும் சுமார் 100 பேர் வரையில் தயார் நிலை‌யி‌ல்.. நானும் சிந்துவும் அம்யூலன்ஸ் வண்டிகள் 5 முதல் 6 களில் நேரடியாக பஸ்ஸர பயணமானோம். 

ஓட்டுநர் மிகுந்த அவதானம் நிறைந்த பாதையில் பாதுகாப்பாக வேகமாக சென்றார். பசரை வைத்தியசாலை பரபரப்பாக காண பட்டது.. அனைவரு‌ம் வேலை நாமும் வேலையை தொடங்கினோம். அங்கு கொண்டு வந்த பெரும்பாலான நபர்கள் சடலங்களாகவே  காணப்பட்டனர்.

உதவிக்கு மேலும் சில வைத்திய தாதியர் குழாம் வருகை தந்தனர். இப்போது விபத்து நடந்த இடத்துக்கு செல்ல வேண்டிய நிலை.. மீண்டும் ஓட்டுநர் வேகம் நிறைந்த பயணத்தில்...

பாரிய ஒரு அழிவு  250 - 300 அடி  பாதாளம்... கீழே இறங்குவது பாரிய ஆபத்து..நான் ஒரு இருதய நோயாளி.. வலது முழங்கால் வலி.. ஆனாலும் செல்ல வேண்டிய கட்டாயம். 25 முதல் 30 கிலோ பாரமான மருந்துகளை சுமந்து கொண்டு புத்திக என் பின்னால்... 400- 500 மனித சங்கிலி.. கைகளில் உடல்கள்.. நோயாளிகள் மேல் நோக்கி கொண்டு வர பட்டனர். கயிறு ஒன்றில் தொங்கிய படி, கைகளின் உதவியுடன் கீழே சென்றோம்.

மேலே இருந்து புரண்டு வந்த கற்கள் ஒருபுறம். நூலிழையில் தப்பினாலும் ஒருவரின் கால் உடைந்து போனது.. காப்பற்ற கூடிய அனைவரும் பாதுகாப்பாக மேலே கொண்டு வர பட்டனர். மிகுந்த சிரமத்துடன் நாமும் மேலே வந்தோம். மனித சங்கிலியில் முஸ்லிம் , தமிழன், சிங்களவன் ஒன்றாக..

தண்ணீர் தமிழனிடம் இருந்து.பணிஸ் முஸ்லிமிடமிருந்து. தேநீர் சிங்களவனிடமிருந்து... எல்லோரும் ஒரே நோக்கத்தில்.. ஜாதி சமயம் அங்கே இருக்கவில்லை... இந்த பிளவு அரசியல்வாதிகளின் விளையாட்டு...அவர்களது அல்லக்கைகளினது. அவர்களது நிலைத்திருத்தளுக்கு... எப்படியானாலும் உண்மையான மனிதர்களை கண்டேன்.. உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் உங்களுக்கு கடன் பட்டிருகின்றேன்... பதிவு பகிர்தல் பெறப்பட்டது : வைத்தியர். பாலித ராஜபக்ஷ.

தமிழில்: Antony Rajakumar

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK