பதிலளிக்க வழங்கப்பட்ட 3 நிமிடம் - இலங்கை அதிருப்தி


ஜெனிவாவில் இலங்கை மீதான பிரேரணைக்குப் பதிலளிப்பதற்காக மூன்று நிமிடங்களே வழங்கப்பட்டுள்ளன எனவும், அது தொடர்பான தமது அதிருப்தியை ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அறிவித்துள்ளோம் எனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான விவாதம் நேற்றும், இன்றும் நடைபெறுகின்றது. அதன்பின்னர் இன்று இலங்கை மீதான பிரேரணை மீது வாக்கெடுப்பும் நடைபெறுகின்றது.

இந்தநிலையில், அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கை மீதான பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை, ஆதாரமற்றவை. இதை அதிகமான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன

இலங்கை மீதான முதலாவது வரைவில் குறிப்பிடப்பட்டிருந்த பல விடயங்களும், இறுதியாக முன்வைக்கப்பட்ட வரைபில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவின் தலைமையில் இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தாலும், தகவல்களின் ஆதாரமற்ற தன்மை காரணமாக பிரிட்டனுக்குள்ளேயே இந்தப் பிரேரணைக்கு எதிர்ப்பு மேலெழுந்துள்ளது என்றார்.


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK