மருதானையில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றிலேயே இன்று அதிகாலை குறித்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. பலப்பிட்டியவைச் சேர்ந்த 46 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.