யுத்த குற்றங்களை ஆவணப்படுத்துவதற்கான ஆணை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது.


இலங்கையின் யுத்த குற்றங்களை ஆவணப்படுத்துவதற்கான ஆணை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளது.

2009 இல் முடிவடைந்த இலங்கையின் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட யுத்த குற்றங்களிற்கான ஆதாரங்கள் தகவல்களை சேகரித்து பாதுகாப்பதற்கான ஆணை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

முகன்மை குழுக்களின் சார்பில் பிரிட்டன் கொண்டுவந்த தீர்மானத்தை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன் மூலம் எதிர்கால விசாரணைகளிற்காக விசாரணைகளை மேற்கொள்வதற்கான மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் திறனை வலுப்படுத்தியுள்ளது.

22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன,11 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன,இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துள்ளன.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK