இலங்கைக்கு எதிரான ஜெனீவா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம், அதிகப்பெரும்பான்மை வெற்றியை பதிவுச்செய்யாதநிலையில் அதனை தோல்வியாக கருதவேண்டும் என்று இலங்கை அரசாங்கம் நியாயப்படுத்தியுள்ளது.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கையில் தற்போது இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அவசியமில்லை என்பதை உணர்ந்துள்ளன.

எனவேதான் அந்த நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்றும் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர்க்குற்றம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நேரடிக்கண்காணிப்பு இலங்கையின் மீது செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ஒரு நாட்டின் அரசாங்கத்தின் ஆதரவின்றி எந்தவொரு தீர்மானத்தையும் நாட்டுக்குள் நடைமுறைப்படுத்த முடியாது என்று தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.