விடயதானங்களை மீறி மற்றும் ஏற்றுக்கொள்ள கூடிய ஆதாரங்களை முன்வைக்காமை காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட்டால் இலங்கைக்கு எதிராக அண்மையில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை நிராகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.