கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் மருத்துவமனையில் 150 சிறுவர்களுக்கு கொரோனா!


கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 150 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் தொிவித்துள்ளார்.

இதேவேளை, 9 மில்லியன் ஒக்ஸ்போர்ட எஸ்ட்ராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தடுப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவினால் வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

இதன்படி நாட்டில் இதுவரை 1,18, 767 பேருக்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

கடந்த 29 ஆம் திகதி முதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் நேற்றைய தினம் மாத்திரம் 23, 217 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK