கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைக் கட்டி யெழுப்பும் பணியைத் தனியாளாக நின்று செய்து முடித்த தன்னை கட்சி உயர் பீடம் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க.

இந்நிலையில், சரத் வீரசேகர போன்று கட்சிக்காக எதுவும் செய்யாதவர்களை நாடாளுமன்றுக்கும் அழைத்துச் சென்று கபினட் அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியையும் வழங்கியிருப்பது தமக்கு வேதனையான விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக விமலவீர திசாநாயக்க பல்வே சர்ச்சைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில் கட்சி தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.