முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்படும் விவகாரத்தை, பாகிஸ்தான் பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், கொழும்பில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த போராட்டம், பலாத்கார தகனத்திற்கு எதிரான தேசிய அமைப்பினால், இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முடியும் என நிபுணர் குழுவினால் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அதனை நிறைவேற்ற வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன்,  சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK