இம்ரானுடனான ஹக்கீம் , ரிஷாத் சந்திப்பு இரத்தானது ஏன்? அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்.


(எம்.மனோசித்ரா)

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் நிகழ்ச்சி நிரலானது இருதரப்பு இராஜதந்திர

குழுக்களாலேயே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் தனிப்பட்ட ரீதியில் நபர்களை தேர்ந்தெடுத்து சந்திப்புக்களுக்கான ஏற்பாடு செய்யப்படுவதில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (23) இணைய வழியூடாக நடைபெற்றபோது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் ,

கேள்வி : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் சந்திப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் , ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டோருக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் அந்த சந்திப்புக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறதே ?

பதில் : வெளிநாட்டு அரச தலைவர்கள் நாட்டுக்கு விஜயம் செய்யும்போது அவர்களின் நிகழ்ச்சி நிரல், சந்திப்புக்கள் தொடர்பில் இருதரப்பு இராஜாதந்திர குழுக்களாலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதே போன்று அவர்கள் செல்ல திட்டமிட்டுள்ள இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் அந்த நிகழ்வு இரத்தாகக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன என்றார்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK