உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான குற்றவியல் விசாரணைகள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் முழுமையடையாதுள்ளதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார். 

இது குறித்து மேலதிக விசாரணைகளை விரைவில் மேற்கொள்ளுமாறும் மற்றும் தகவல்களை தாமதமின்றி சமர்ப்பிக்குமாறும் சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். 

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார்.