சாணக்கியனுக்கு கல்முனை நீதிமன்றத்தினால் அழைப்பாணை


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கல்முனை நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கண்டன பேரணியில் கல்முனை நீதிமன்ற பிரதேசத்திற்குள் தடையுத்தரவை மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பாணை இன்று(செவ்வாய்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனிடம் பொலிஸாரினால் கையளிக்கப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இன்று கல்முனை நீதிமன்றத்தினால் எனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தடை உத்தரவினை மீறியதாக தெரிவித்தே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

உண்மையிலேயே நான் எவ்வாறு நீதிமன்ற தடை உத்தரவினை மீறினேன் என எனக்கு தெரியாது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK