கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து 2 நாட்களில் உயிரிழந்த இளம் யுவதி


கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த யுவதி ஒருவர் திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளார். மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த யுவதி உயிரிழந்துள்ளார் என ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரிதிமாலியந்த பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 4 பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தில் மூத்த மகளே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ரிதிமாலியந்த கெமுனுபுர ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் குறித்த யுவதி கோவிட் தொற்றுக்குள்ளாகி தியதலாவை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 10 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

பின்னர் இரண்டு நாட்களின் குறித்த பெண்ணுக்கு சுவாசிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அம்பியுலன்ஸ் உதவியுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். எனினும் அதிகாரிகளின் தாமதம் காரணமாகவே மகள் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். உயிரிழந்த யுவதியின் சடலம் பதுளை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK