சட்டமா அதிபரால் கடந்த 2019 ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2020 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் 26,749 குற்றவியல் வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

14,083 குற்றப்பத்திரிக்கைகள் மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.