கொரோனா தடுப்பூசியை முதலில் ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நடப்பு அரசாங்கத்திடம் முன்வைக்க தாம் தயாராக உள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் விதம் தொடர்பில் மேற்பார்வை செய்த போது ஊடகங்களுடன் பேசிய வேளையில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.