இலங்கையின் நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை பைத்தியம் என்று விமர்சித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பின்னர் தமது கருத்தை திரும்பப்பெற்றுக்கொண்டார்.

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை விநியோகிப்பது குறித்து பிரேமதாச அரசாங்கத்தரப்பிடம் கேள்வி எழுப்பியபோது இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச நாடாளுமன்ற நேரத்தை வீணடிப்பதாக பெர்னாண்டோ குற்றம் சுமத்தினார்.

இதன்போது அவரை பைத்தியம் என்று கூறியதை திரும்பப்பெற்றுக்கொண்ட ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒரு “முட்டாள்" என்று அழைத்தார் என்று சுட்டிக்காட்டினார்.

எனினும் சஜித் பிரேமதாச, ஜோன்ஸ்டனின் கருத்துக்கு பதிலளிக்கவில்லை, மாறாக பாடசாலை சீருடை பிரச்சினையில் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக அரசாங்கத்தை தொடர்ந்து குற்றம் சுமத்தினார்.