அழகரத்னம் மனோரஞ்சனுக்கு பிணை


3 மாத காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கடந்த அரசாங்கத்தின் போது செயற்பட்ட இடம்பெயர்ந்தோரை மீள பதிவு செய்யும் வேலைத்திட்டத்தின் கணக்காளர் அலகரத்னம் மனோரஞ்சன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணைகள் இரண்டின் அடிப்படையில் இவரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு மார்ச் மாதம் 27 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்தோரை புத்தளத்தில் இருந்து சிலாவத்துறை வரையில் 221 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மூலம் அழைத்து சென்றதாக இவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

0 Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin