ஈ.டி.ஐ மற்றும் சுவர்ணமஹால் நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈ.டி.ஐ மற்றும் சுவர்ணமஹால் நிறுவனத்தின் பணிப்பாளர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.