புத்தர் சிலையை சேதப்படுத்திய நபர் சிங்கள இளைஞர்- பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன


கேகாலை மாவனெல்லை பொலிஸ் பிரிவின் ஹிகுல பிரதேசத்தில் - கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை சேதப்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அடிப்படைவாதமோ அல்லது பயங்கரவாத செயலலோ அல்ல என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கேகாலை- ஹெட்டிமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான போதைப் பொருளுக்கு அடிமையான பிரியந்த சமபத் குமார என்ற சிங்களவரே இந்த செயலை செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த நபர், விகாரைகள் மற்றும் வேறு வணக்கஸ்தலங்களில் வைக்கப்பட்டுள்ள காணிக்கை உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையிட்டுள்ளதாகவும் சேதமாக்கப்பட்ட புத்தர் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

0 Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin