முகவசம் அணியாத காரணத்திற்காக கைது செய்யப்பட்ட இருவருக்கு கொரோனா


புறக்கோட்டை பகுதியில் முகவசம் அணியாத காரணத்திற்காக கைது செய்யப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாதவர்களை இனங்காண்பதற்காக புறக்கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 20 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் துரித அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post