எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலவுக்கோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ கொவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், கடந்த 5ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு வருகைதந்த சந்தர்ப்பத்தில் அவருடன் நெருக்கமான தொடர்பினை பேணியவராக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தானாக முன்வந்து அவர் தனது குடும்பத்தினருடன் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டிருந்தார்.

இந்தப் பரிசோதனைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர்கள் எவருக்குமோ கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.