முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம்! நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு


முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் (MMDA) திருத்தப்பட உள்ளதாக நீதி அமைச்சர் முகமது அலி சப்ரி நேற்று  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உத்தேச திருத்தங்கள் மூலம் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது 18 ஆக உயர்த்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

தற்போது திருத்தங்களை அறிமுகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “இது கண்டிப்பாக செய்யப்பட வேண்டிய ஒன்று, நாங்கள் இதைச் செய்கிறோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாக இடம்பெறவில்லை.

முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் தொடர்பான ஒப்பந்தம் 2019ஆம் ஆண்டிலும் எட்டப்பட்டது.

திருத்தங்கள் குறித்து அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டதாக அப்போதைய அமைச்சர் பைசர் முஸ்தபா நாடாளுமன்றத்திற்கு தெரிவித்திருந்தார்.

மணமகன் மற்றும் மணமகள் இருவருக்கும் திருமண வயது 18 ஆக இருக்க வேண்டும் என்று 2019 ல் முன்மொழியப்பட்டது என நீதி அமைச்சர் முகமது அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post