மத்ரஸா பாடசாலைகள் சட்டவிரோதமானவை... பாராளுமன்றில் அத்துரலியே ரத்தன தேரர்.


(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

"இஸ்லாமிய அடிப்படைவாதம் மத்ரஸா பாடசாலைகளிலே போதிக்கப்படுகிறது. அதனால் மத்ரஸா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வர வேண்டும்" என எமது மக்கள் சக்தி உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்தார்.

அத்துடன் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான எந்த வேலைத்திட்டங்களையும் இதுவரையும் மேற்கொள்ளாமல் உள்ளது என அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று (6) புதன்கிழமை நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், "ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையை நிலைநாட்டுவதாக தெரிவித்தாலும் இன்னும் அது ஏற்படுத்தப்படவில்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதிப்பவை மத்ரஸா பாடசாலைகளாகும். கல்வி அமைச்சுக்கு அப்பாற்பற்று செயற்படும் இந்த மத்ரஸா பாடசாலைகள் சட்டவிரோதமானவை. அதனால் அவற்றைக் கல்வி அமைச்சுக்கு கீழ் கொண்டுவர வேண்டும். ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் அறநெறி பாடசாலைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை.

அதேபோன்று இஸ்லாம் மாக்கத்தைவிட்டு மதம் மாறியவர்களை கொலை செய்யவேண்டும் என குர்ஆனில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விடயம் 10ஆம் ஆண்டும் இஸ்லாம் அச்சுப் புத்தகத்தில் பொறிக்கப்பட்டிருப்பதே பாரிய விடயமாகும். அந்தளவுக்கு நாங்கள் குருடர்களாகவே இருந்திருக்கிறோம்.

பங்களாதேஷ் நாட்டிலும் பார்க்க எமது நாட்டில் முஸ்லிம்கள் அடிப்படைவாத ஆடை மற்றும் உணவு பழக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர்" என்றார்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK