காலி – உடுகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ள வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி சிறைச்சாலை கைதியொருவர் நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்திருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

பாகின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.