முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதற்கமைய அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லையென என உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டவர் என்ற ரீதியில் பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.