யாழ் பல்கலை கிளிநொச்சி வளாக புத்தர் சிலைமீது தாக்குதல்!


கிளிநொச்சி வளாகத்தில் உள்ள புத்தர் சிலைமீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை எப்னவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரையில் காணப்படும் புத்தர் சிலை மீதே இனம் தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காட்டு பகுதியின் ஊடாக நுழைந்தவர்கள் பாதுகாப்பு வேலியை கடந்து நுழைந்துள்ளதுடன் சிலையை சேதமாக்க முயற்சித்துள்ளனர். எனினும் குறித்த சிலையானது எவ்வித சேதங்களிற்கும் உள்ளாகவில்லை எனவும், அதன் மேல் பகுதியில் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post