தென் கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டயர் உற்பத்தி தொழிற்சாலை ஹொரண பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

100 மில்லியன் அமொிக்க டொலர் செலவில் 155 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலையின் முதல் கட்ட உற்பத்திகளில் 80 வீதமானவை ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.