பாராளுமன்ற நடவடிக்கைகள் வழமைக்கு


பாராளுமன்ற பணிக்குழாம் அங்கத்தவர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்படும் என படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் நேரடி தொடர்புகளை பேணிய 17 பேர் இணங்காணப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் தொடர்பாளர்களை இனங்காணும் பணி முன்னெடுக்கப்படுகிறது. பாராளுமன்ற நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறுவதாக படைக்கல சேவிதர் கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post