வாசுதேவ நாணயக்காரவுடன் தொடர்பில் இருந்த 10 பேர் அடையாளம்


கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் தொடர்பினைப் பேணிய 10 பேர் முதல் தொகுதி தொடர்பாளர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.


இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்கும், அவர்களுடன் தொடர்புபட்ட பிரிவுகளுக்கும் தெரியப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.


அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கடந்த பாராளுமன்ற அமர்வு வாரத்தின் நான்கு நாட்களும் பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்ததாக படைக்கல சேவிதர் சுட்டிக்காட்டினார்.


அதேநேரம், எதிர்வரும் 13 மற்றும் 15 ஆம் திகதிகளில் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை பாராளுமன்றத்தில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்க முடியும் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருப்பதாகவும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னான்டோ மேலும் குறிப்பிட்டார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK