இலங்கை தமிழ் ஊடகங்களில் திடீரென பதவி விலகிய பிரபலங்கள்-மர்மம் என்ன?


இலங்கை தமிழ் ஊடகங்களில் கடந்த ஓரிரு தினங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக பிரபல அறிவிப்பாளர்கள் தமது பதவிகளிலிருந்து விலகி வருவதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையின் பிரபல வானொலியான சூரியன் எப்.எம்மில் கடமையாற்றிய சந்துரு மற்றும் மேனகா ஆகியோர், திடிரென தமது பதவி விலகலை அறிவித்திருந்தனர். இந்த இருவரும் தமது பேஸ்புக் ஊடாக ரசிகர்களுக்கு தமது விலகல் தொடர்பிலான அறிவிப்பை விடுத்திருந்தமை, ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டே, தாம் பதவி விலகியதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அன்பான நேயர்கள் உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் கோடி ❤️

தனிப்பட்ட காரணங்களுக்காக நாங்கள் சூரியனில் இருந்து விலகுகிறோம்….

Posted by Menaka Thuraisingham Chandru on Thursday, January 21, 2021

இதேவேளை, ஸ்டார் தமிழ் வானொலியின் பிரபல அறிவிப்பாளரான சக்சிவர்ணன் (Rj சக்சி) தனது பதவி விலகலை அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

மேலும், தனியார் தொலைக்காட்சியொன்றில் கடமையாற்றி வந்த பிஸ்ரின் மொஹமட்டும் பதவி விலகலை அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK