சிரேஷ்ட ஊடகவியலாளரும், பன்னூலாசிரியருமான சாய்ந்தமருது
எம்.எம்.எம். நூறுல்ஹக் இன்று (25) காலமானார்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடரந்து சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை காலமானார். அன்னாரின் ஜனாஸா ஏறாவூரில் உள்ள அவரது மகளாரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

எம்.எம்.எம். நூறுல் ஹக் (1964.08.27 ) அம்பாறையைச் சேர்ந்த நாடறிந்த எழுத்தாளர். ஊடகத்துறையில் டிப்ளோமா முடித்துள்ள இவர் மிஹ்லார், செஞ்சுடர், இலக்கனி என்னும் புனைபெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், நூல் விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.

கணிசமான இளம் ஊடகவியலாளர்களையும், எழுத்தாளர்களையும் உருவாக்கி அவர்களுக்கு வழிகாட்டிவந்த இவர் செய்தி இணையதளம் ஒன்றையும் நடத்திவந்தார். இறுதியாக இவர் கிழக்கு மாகாண வித்தகர் விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக ஆமீன்.