கொழும்பில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்


இலங்கையில் இன்றைய தினம் (25) காலை வரையிலும் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான 843 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கொவிட்-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவர்களுள், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த இலங்கையர் இருவரும், ஏனைய 841 பேரும் நாட்டிற்குள் தொற்றுக்குள்ளானவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானோர் (480 பேர்) கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், கம்பஹா மாவட்டத்தில் 86 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 72 பேரும், ஏனைய மாவட்டங்களிலிருந்து 203 பேரும் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் (25) காலை வரையிலும் கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களிலிருந்து 423 பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளதாக கொவிட்-19 வைரஸ் பரவல் தடுப்புக்காண தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று காலை (25) கடந்த 24 மணித்தியாலத்தில் இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் மூவர்வர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மருதானை, கொழும்பு 14 மற்றும் பூஜாபிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார். இதன்படி இன்று (25) வரையிலும் இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் (25) வரையில் முப்படையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது 92 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 7,812 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றைய (24) தினத்திற்குள் 17,523 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட்-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK