கொரோனா தொற்றுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் கடந்த தினம் பாராளுமன்றத்தில் தொடர்பில் இருந்த 12 பேர் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2 பாராளுமன்ற ஊழியர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.