ஜனாஸா விவகாரம் ; விவகாரம் – எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்காமல் தீர்வை காணவேண்டும்- நீதியமைச்சர்


கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்கள் அனைவரையும் கட்டாயமாக தகனம் செய்யவேண்டும் என்ற கொள்கைளை அரசாங்கம் மறுசீரிலனை செய்யவேண்டும் என நிபுணர்கள் குழுவொன்று வேண்டுகோள் விடுத்துள்ளது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் உடல்களை அகற்றுவது மிகவும் உணர்வுபூர்வமான விடயம் என தெரிவித்துள்ள நீதியமைச்சர் அலி சப்ரி எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்காமல் தீர்வை காணவேண்டும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின உடல்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் உலகின் 190 நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன என தெரிவித்துள்ள நீதியமைச்சர் மருத்துவநிபுணர்கள் குழுவொன்று உலகின் ஏனைய நாடுகள் போல இலங்கையிலும் உடல்களை தகனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுமா என கேள்வி எழுப்பியுள்ளது என தெரிவித்துள்ளார்.

தாங்கள் நியாயமற்ற விதத்தில் நடத்தப்படுவதாக ஏதாவது ஒரு சமூகம் நினைத்தால் அனைத்து இலங்கையர்களையும் ஐக்கியப்படுத்தும் அரசாங்கத்தின் இலக்கிற்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் சமூகம் தனது மதநம்பிக்கைகளை பின்பற்றுவதற்கான அனுமதியையே கோருகின்றது என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin