சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்..!


தற்பொழுது முதல் அமுலாகும் வகையில் நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய கொஸ்கம மற்றும் ருவன்வெல்ல காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகள் தற்பொழுது முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஆயத்தம் காணப்படுதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக நேற்றைய தினம் சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்திகள் பரவின

பண்டிகை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் இவ்வாறு செய்திகள் பரவினாலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்க தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கராபிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவரின் சடலம் இன்று தகனம் செய்யப்பட்டுள்ளது.

காலி – தடல்ல தகனசாலையில் குறித்த சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர் மற்றும் காவல்துறை அதிரப்படையின் விசேட பாதுகாப்பின் கீழ் இந்த நடவடிக்கை இடம்பெற்றதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, பண்டிகைக்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் மேல் மாகாணத்தில் இருந்து வெளியோருவருக்கு 11 இடங்களில் ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பரிசோதனைகளில் இதுவரை 17 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

நுகேகொடை பிரிவில் ஹங்வெல்லயிலும், பாணந்துறை பிரிவில் கெட்டகெடொல்ல, கம்பஹா பிரிவில் ஹெலகல, கிரிவுல்ல, சமனலபெத்த, நீர்கொழும்பு பிரிவில் தோப்பு, படல்லகம, களுத்துறை பிரிவில் பெந்தல, தீனியாவல, அவித்தாவ மற்றும் கலவான ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளின் போதே குறித்த தொற்றுறுதியானவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வட்டவளையில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் 10 பணியாளர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் குறித்த ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று வெளியாகிய பி.சி.ஆர் அறிக்கையில் நான்கு ஆண் பணியாளர்களுக்கும், ஆறு பெண் பணியாளர்களுக்கும் இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் வட்டவளை மவுண்ஜின் தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து அவருடன் தொடர்பை பேணிய 60 பேருக்கு கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் அறிக்கை நேற்று வெளியாகியுள்ள நிலையில் அந்த ஆடை தொழிற்சாலையின் மேலும் 10 பணியாளர்களுக்கு தொற்றுறுதியானமை தெரியவந்துள்ளது.

குறித்த ஆடைத்தொழிற்சாலை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் அங்கு பணிபுரிந்த அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK