இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 தொற்றாளர்கள் நேற்று (22) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிபபாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.

தங்கொடுவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவன் கொவிட் தொற்றுடன் நியுமோனியா அதிகரித்த காரணத்தால் உயிரிந்துள்ளான்.

மேலும், கொழும்பு 07 பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

கொவிட் தொற்றுடன் நியுமோனியா ஏற்பட்ட காரணத்தால் அவர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.