சஜித் அணியுடன் இணையமாட்டார்கள் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்: தயாசிறி


ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியில் இணையமாட்டார்கள் என்று சு.கவின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர நம்பிக்கை வெளியிட்டார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயற்பாடுகள் மீது அதிருப்தியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளனர் எனவும், அதற்கான பேச்சுகள் நடைபெற்று வருகின்றன எனவும், நாளை நடைபெறவுள்ள சு.கவின் மத்தியகுழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் வினவியபோதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு கூறினார்.

"கூட்டணிக்குள் பிரச்சினைகள் இருப்பது உண்மைதான். இவை தொடர்பில் பேச்சுகள் நடத்தப்பட்டு முடிவுகள் எட்டப்படும். எனினும், சஜித் அணியுடன் இணையும் எண்ணம் இல்லை. அதற்கு நாம் என்றும் தயாரில்லை" எனவும் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK