சுமார் 60 இலங்கையர்கள் மீள அழைத்துவரப்பட்டுள்ளனர்! அமைச்சர் நாமல் வெளியிட்ட தகவல்


கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த சுமார் 60,000 இலங்கையர்கள் இன்று வரை 137 நாடுகளில் இருந்து மீள அழைத்து வரப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதன்படி, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 59,377 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கிலிருந்து 26,812 பேரும், கிழக்கு ஆசியாவிலிருந்து 12,005 பேரும், தெற்காசியாவிலிருந்து 10,033 பேரும், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிலிருந்து 5,484 பேரும், ஆப்பிரிக்க பிராந்தியத்திலிருந்து 2026 பேரும், வட அமெரிக்காவிலிருந்து 2,124 பேரும், ரஷ்யாவிலிருந்து 1,605 பேரும் மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து 189 பேரும் இவ்வாறு மீள அழைத்து வரப்படுள்ளனர்.

டிசம்பர் மாதம் மட்டும்11,323 பேர் மீள அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 12,395 ஆக உயரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,

இது ஒரு மாதத்திற்கு மீள அழைத்து வரப்பட்ட மிக உயர்ந்த எண்ணிக்கையாகும், சராசரியாக 400 பேர் தினசரி மீள அழைத்து வரப்படுகிறார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post