நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


சிங்ஹல ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரரே இந்த முறைப்பாடடை இன்று (22) பொலிஸ் தலைமையகத்தில் எழுத்துமூலம் கையளித்துள்ளார்.


கொரோனாவை கட்டுப்படுத்தவும் வைரஸ் பரவாமல் தடுக்கவும் அரசாங்கம் மேற்கொள்ளும் பொதுவான சட்டத்தை கடைப்பிடிப்பது நாட்டு மக்களது கடமை.



இவ்வாறான நிலையில், கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டுவரும் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த முறைப்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை  அடக்கம் செய்ய அனுமதிக்காமல் எரிப்பதன் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாதத்துக்கு தள்ளப்படலாம் என அண்மையில் அலி சப்ரி தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(படப்பிடிப்பு : ஜே. சஜீவகுமார்)