2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் கடந்த 20 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றுள்ளபோதும் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கு அமைய பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

2019 ஏப்ரல மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.