கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார்.
ஜனாசாக்கள் தகனம் செய்யப்படுவது குறித்து நேற்றைய தினம் (10) முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமருடன் விசேட சந்திப்பு ஒன்றை நடாத்தியிருந்தனர்.
கொவிட்டினால் உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கு உலர்ந்த நிலப்பரப்பு ஒன்றைத் தெரிவு செய்யுமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
சுகாதாரத்துறையின் நிபுணர்களினது அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த நிலப்பரப்பு தெரிவு செய்யப்பட வேண்டுமெனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மிகவும் உலர்ந்த நிலமொன்றைத் தெரிவு செய்யுமாறும் அங்கு நிலக்கீழ் நீர் மிகவும் ஆழத்தில் இருக்க வேண்டுமெனவும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இன, மத ரீதியிலான காரணிகளின் அடிப்படையில் சுகாதார விடயங்களில் தீர்மானங்களை எடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு அனைத்து இன, மத சமூக மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin