கொழும்பில் இரவோடு இரவாக அகற்றப்பட்ட கடைத் தொகுதிகள்!


கொழும்பு பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையத்திற்கும் புலொட்டிங் மார்க்கட் கடைத் தொகுதிக்கும் இடையில் வீதியோரத்தில் அமைந்துள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட சிறிய கடைத் தொகுதிகள் கொழும்பு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்று இரவு அகற்றப்பட்டன.

பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த வீதி முற்றாக மூடக்கப்பட்டு பல தொழிலாளர்களும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பெக்கோ இயந்திரங்களினாலும் இக்கடைத் தொகுதிகள் முற்றாக அகற்றப்பட்டன.

இக்கடைத் தொகுதிகள் அகற்றப்பட்டதால் பலர் தமது தொழிலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post