பண்டாரகம அடுலுகம பிரதேசத்தில் மேலும் 195 தொற்றாளர்கள் நேற்றைய தினம் இனங்காணப்பட்டதாக பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டது.

631 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள களுத்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு சொந்தமான குடா ஹீனடியன்கல பிரதேசத்தில் இன்று பிசிஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதில் பங்கேற்றதாக சுகாதார பிரிவு தெரிவித்தது.

இதேவேளை, திருகோணமலை நகரில் 15 கொவிட் தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்ட நிலையில் அதில் 13 பேர் திருகோணமலை ஜமாலிய பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.