இரண்டு மாதங்களின் பின் கொழும்பின் ஆறு தொடர்மாடி மனைகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

மட்டக்குளி – ரன்திய உயன, மோதர – மெத்சந்த செவன மற்றும் மிஹிஜய செவன, கிரான்ட்பாஸ் மோதர உயன மற்றும் சமகிபுர தொடர்மாடி, தெமட்டகொடை மிஹிதுசென் வீடமைப்புத் திட்டம் என்பனவே தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் 7 தொடர்மாடி மனைகள் தொடர்ந்தும் அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன.

எவ்வாறெனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனையின்பேரில் தொடர்மாடி மனைகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் விரிவாக்கப்பட்டுள்ளதோடு வீடு தோறும் ஒருவர் பி.சீ.ஆர். பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.